சீனாவில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின்
சீனாவில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இரு நாட்களாகக் குறைந்து வருவதாக சீனத் தேசிய சுகாதார அணையம் தெரிவித்துள்ளது. 

தொடக்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியால் முன்னேற்றம் மேலும் தெளிவாகக் காணப்பட்டுள்ளது என்று சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் பிப்ரவரி 7-ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.  பிப்ரவரி 6-ஆம் தேதி, சீன முழுவதிலும் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3143 ஆகும். 

சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி குவோ யன் ஹொங் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், 
ஹுபெய் மாநிலத்தில் வூஹான் நகரைத் தவிர பிற நகரங்களுக்கும் சீனாவின் 16 மாநிலங்களுக்கும் இடையே ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியிலான உதவி முறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்ஹுபெய் மாநில நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை ஆற்றல் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com