கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான்

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான்


பெய்ஜிங்: சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மட்டும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 97 பேர் பலியாகியிருப்பதாகவும், புதிதாக 3,062 பேருக்கு இந்த வைரஸ் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா வைரஸுக்கு அப்பெயர் வரக் காரணம் என்ன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா என்பது லத்தீன் மொழியாகும். லத்தீன் மொழியில் கரோனா என்றால் க்ரீடம், மகுடம் என்று பொருளாகும். எலக்ட்ரோன் மைக்ரோஸ்கோப்பில் பார்க்கும் போது கரோனா வைரஸானது க்ரீடம் போலவும், சூரிய கதிர்வீச்சுப் போலவும் காணப்படுவதால், கரோனா என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நோவல் கரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்கும் சில வழிமுறைகள்

பொதுவாக நோவல் கரோனா வைரஸைப் பொருத்தவரை மூன்று நிலைகளாக மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். 

1. பாதிக்கும் வாய்ப்பு இருப்பவர் அல்லது அறிகுறியுடன் இருப்பவர், 2. கரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பவர், 3. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்.

முதல் வகையில், கரோனா வைரஸ் பாதித்த இடங்களுக்குச் சென்று வந்தவர்கள். இவர்கள் 28 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இரண்டாவது வகையில், தீவிர காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை இருப்பவர் மற்றும், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்தவர்கள், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இவர்களுக்கு எடுக்கப்படும் இரண்டு மருத்துவப் பரிசோதனைகளிலும், கரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான் இவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் அதற்கான சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com