சீன மருத்துவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
சீன மருத்துவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிப்ரவரி 9ஆம் தேதி, சமூக ஊடகத்தின் மூலம், கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற சீன மருத்துவப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். 

அவர் கூறுகையில்,

சீனாவின் மருத்துவப் பணியாளர்கள், குறிப்பாக ஹுபெய் மாநிலத்தின் மருத்துவப் பணியாளர்கள், பெரிய நிர்ப்பந்தத்தில், வைரஸ் பாதித்தவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் அதேவேளையில் கரோனா வைரஸ் பற்றிய அறிவியல் ஆய்வுக்குத் தேவையான புள்ளிவிவரங்களைத் திரட்டி வருகின்றனர். அவர்களின் இந்தக் கடின முயற்சிகளுக்கு உலகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

மேலும், கரோனா வைரஸ் பரவலை எதிர்த்துகொள்ளும் விதம், மருத்துவ மற்றும் அறிவியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் நாடு கடந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தடுப்புக்கான உலகின் ஆய்வு மற்றும் புதுமை கருத்தரங்கு, பிப்ரவரி 11 மற்றும் 12ஆம் தேதி, ஜெனீவாவில் நடைபெறவுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com