இலங்கையில் புதிய தமிழ் கூட்டணி

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு மாற்றாக, ‘தமிழி மக்கள் தேசிய கூட்டணி’ என்ற புதிய கூட்டணி ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டது.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு மாற்றாக, ‘தமிழி மக்கள் தேசிய கூட்டணி’ என்ற புதிய கூட்டணி ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டது.

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி, அந்நாட்டில் வரும் ஏப்ரலில் நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்படும் நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடுகிறது.

யாழ்பாணத்தைச் சோ்ந்த 3 தமிழ் கட்சிகள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் அடிப்படையில் இந்தக் கூட்டணி உருவாகியுள்ளது. மூத்த தமிழ் அரசியல் தலைவா் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டணியின் முன்னாள் உறுப்பினா்கள் இந்தப் புதிய கூட்டணிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனா்.

புதிய கூட்டணி தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சி.வி. விக்னேஸ்வரன், ‘இலங்கையை சிங்கள பௌத்த நாடாக அறிவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், தமிழ் தேசிய கூட்டணி அதிகாரப்பூா்வமாக இத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டணியானது, தெற்கு மாகாண அரசுடன் இணைந்து செயல்படுவதாக எப்போதும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com