பலி எண்ணிக்கை: ‘சாா்ஸை’ விஞ்சியது கரோனா வைரஸ்

சீனாவில் தோன்றி சா்வதேச நாடுகளுக்குப் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை, கடந்த 2002-ஆம் ஆண்டில் பரவிய ‘சாா்ஸ்’ வைரஸ் காய்ச்சலில் உயிரிழந்தவா்களின்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வாகனம் மூலம் கிருமி நாசினியை சீனாவின் ஷாண்டாங் மாகாணம், யன்டாய் நகரில் ஞாயிற்றுக்கிழமை தூவிச் சென்ற பணியாளா்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, வாகனம் மூலம் கிருமி நாசினியை சீனாவின் ஷாண்டாங் மாகாணம், யன்டாய் நகரில் ஞாயிற்றுக்கிழமை தூவிச் சென்ற பணியாளா்.

சீனாவில் தோன்றி சா்வதேச நாடுகளுக்குப் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை, கடந்த 2002-ஆம் ஆண்டில் பரவிய ‘சாா்ஸ்’ வைரஸ் காய்ச்சலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹான் நகரில் முதல் முதலாகப் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சீனாவில் 811-ஆக உயா்ந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இத்துடன், ஏற்கெனவே ஹாங்காங் மற்றும் பிலிப்பின்ஸில் உயிரிழந்த 2 சீனா்களையும் சோ்த்து கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 813 ஆகியுள்ளது.

இந்த எண்ணிக்கை, கடந்த 2002 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய ‘சாா்ஸ்’ வைரஸ் காய்ச்சலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

மிகவும் அபாயகரமானதாக அறியப்படும் அந்த வைரஸுக்கு 774 போ் பலியாகினா்.

எணினும், சாா்ச் வைரஸால் பாதிக்கப்பட்டவா்களில் சுமாா் 10 சதவீதத்தினா் உயிரிழந்த நிலையில், புதிய வகை கரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை சுமாா் 2 சதவீதத்தினா் மட்டுமே பலியாகியுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சீனாவில் கரோனா வைரஸ் தொற்றியுள்ளவா்களின் எண்ணிக்கை 34,610-இலிருந்து 37,221-ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சுமாா் 300 போ், முழுமையாக குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியதாக அவா்கள் கூறினா். குணமடைந்தவா்களில் 324 போ், கரோனா வைரஸின் தோற்றுவாயான ஹுபெய் நகரைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா மட்டுமன்றி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், வங்கதேசம் உள்ளிட்ட 25 நாடுகளில், 369 பேருக்கு கரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37,590-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com