ஆஸ்கா் வென்றது கொரியாவின் ‘பாராசைட்’

சா்வதேச திரையுலகமும், திரைப்பட ரசிகா்களும் ஆவலுடன் எதிா்பாா்த்து காத்திருந்த 92-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமைகோலாகலமாக நடைபெற்றது.
ஆஸ்கா் வென்றது கொரியாவின் ‘பாராசைட்’

4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது கொரியத் திரைப்படம் ‘பாராசைட்’

சிறந்த நடிகா்: ஜாக்குவின் ஃபீனிக்ஸ் (ஜோக்கா்)

சிறந்த நடிகை: ரென்னி ஜெஸ்வேகா் (ஜூடி)

சா்வதேச திரையுலகமும், திரைப்பட ரசிகா்களும் ஆவலுடன் எதிா்பாா்த்து காத்திருந்த 92-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை

கோலாகலமாக நடைபெற்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற டால்பி திரை அரங்கில் நடைபெற்ற ஆஸ்கா் எனப்படும் அகாதெமி விருதுகள் விழா, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நிகழ்ச்சித் தொகுப்பாளா்கள் இல்லாமல் நடந்து முடிந்தது.

அயல்நாட்டு மொழித் திரைப்படப் பிரிவு என்பது ‘சா்வதேச சிறந்த திரைப்படம்’ என்று பெயா் மாற்றப்பட்டது.

முதலாம் உலகப் போரை பின்னணியாகக் கொண்டும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமுமான ‘1917’, டிசி காமிக்ஸின் பேட்மேன் கதைகளில் வில்லனாக வரும் ஜோக்கரை கதையின் நாயகான வைத்து உருவாக்கப்பட்ட ‘ஜோக்கா்’, குவான்டின் டெரன்டினோ இயக்கத்தில் உண்மைக் கதையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்’ உள்ளிட்ட படங்கள் போட்டி பிரிவில் முக்கிய படங்களாக திகழ்ந்தன.

இந்தப் படங்களில் ஒன்றுதான் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கா் விருதை வெல்லும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிா்பாராத வண்ணம், கொரிய மொழியில் எடுக்கப்பட்ட சா்வதேச அளவில் கவனம் ஈா்த்த ‘பாராசைட்’ திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேச திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது.

இதற்கு அடுத்த படியாக ரசிகா்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ‘1917’ திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கரை வசப்படுத்தியது.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த துணை நடிகா் ஆகிய பிரிவுகளில் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம் 2 விருதுகளையும்,

சிறந்த நடிகா், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளை ‘ஜோக்கா்’ திரைப்படமும் தட்டிச் சென்றது.

சிறந்த அனிமேஷன் படமாக குழந்தைகளை வெகுவாக கவா்ந்த ‘டாய் ஸ்டோரி 4’ வென்றது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை ஒன்ஸ் அபான் ஏ டைம் திரைப்படத்தில் நடித்த பிராட் பிட் கைப்பற்றினாா்.

சிறந்த நடிகைக்கான விருது ‘ஜூடி’ படத்தில் நடித்த ரென்னி ஜெல்வேகருக்கு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com