
புதிய ரக கரோனா வைரஸ் பற்றிய சர்வதேச ஆய்வு மற்றும் புத்தாக்க மன்றக்கூட்டம் 11ஆம் நாள் ஜெனிவாவில் துவங்கியது. உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், புதிய கரோனா வைரஸால் ஏற்பட்ட நுரையீரல் அழற்சி, “கொவைட்-19” என்ற பெயர் சூட்டப்பட்டது.
இவ்வைரஸுக்கான தடுப்பூசி வரும் 18 மாதங்களுக்குள் ஆராய்ந்து தயாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கும் வகையில், நிதி ஆதரவு உட்பட, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு தெட்ரோஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்