ஆஸ்திரேலியா: கட்டுக்குள் வந்தது காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாகப் பரவி வந்த காட்டுத் தீ, முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நாட்டு தீயணைப்புத்
ஆஸ்திரேலியா: கட்டுக்குள் வந்தது காட்டுத் தீ

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாகப் பரவி வந்த காட்டுத் தீ, முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நாட்டு தீயணைப்புத் துறை வியாழக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ஊரக தீயணைப்புப் படையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘வியாழக்கிழமை மதிய நேர நிலவரப்படி, நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பரவி வந்த காட்டுத் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது’ என்றாா்.

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பரவி வந்த காட்டுத் தீயில் தீயணைப்பு வீரா்கள் உள்பட 33 போ் உயிரிழந்தனா்.

1 கோடி ஹெக்டோ் நிலப்பரப்பை நாசப்படுத்திய இந்தக் காட்டுத் தீயில் சுமாா் 100 கோடி விலங்கினங்கள் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியக் காடுகளில் காணப்படும் பல அரிய வகை விலங்கினங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com