கொவைட்-19: ஹுபெய் மாநிலத்துக்கு 25,633 மருத்துவப் பணியாளர்கள்

‘கொவைட்-19’ வைரஸ் நோய் தடுப்புக்கு உதவும் விதமாக, ஹுபெய் மாநிலத்திற்கு 25,633 மருத்துவப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
கொவைட்-19: ஹுபெய் மாநிலத்துக்கு 25,633 மருத்துவப் பணியாளர்கள்


‘கொவைட்-19’ வைரஸ் நோய் தடுப்புக்கு உதவும் விதமாக, ஹுபெய் மாநிலத்திற்கு 25,633 மருத்துவப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

‘கொவைட்-19’ வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி, முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த கட்டம், நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறுவதை உறுதிச் செய்ய வேண்டும். இதன் மூலம், குணமடையும் வாய்ப்பை அதிகரித்து, உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பது மிக முக்கிய பணியாகும் என்று சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குநர் வாங் ஹெஷேங் தெரிவித்தார்.

மேலும், 15ஆம் நாள் சனிக்கிழமை சீன அரசவைச் செய்தி அலுவலகம் வுஹான் நகரில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவர் கூறுகையில், ஹுபெய் மாநிலம் நீங்கலாக, மற்ற பகுதிகளில் புதிதாக கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 10ஆவது நாளாக குறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், பிப்ரவரி 14ஆம் நாள் 24 மணி வரை, சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 25633 மருத்துவப் பணியாளர்கள் ஹுபெய் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது, 9 தற்காலிக மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் 6,969 க்கும் மேலான படுக்கைகளைக் கொண்டு, 5606 நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்க முடியும் என்று வாங் ஹெஷேங் கூறினார்.

மருத்துவச் சிகிச்சையில், சீனப் பாரம்பரிய மருத்துவம், மிக சிறப்பாக பாங்காற்றி வருகிறது. ஹுபெய் மாநிலத்தில் பெரும்பாலான நோயாளிகள் சீனப் பாரம்பரிய மருத்துவச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் வாங் ஹெஷேங் தெரிவித்தார்.


தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com