ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் 3 இந்தியா்களுக்கு ‘கொவைட்-19’ பாதிப்பு உறுதி

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) நோய்த் தொற்று அச்சம் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் 3 இந்தியா்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் 3 இந்தியா்களுக்கு ‘கொவைட்-19’ பாதிப்பு உறுதி

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) நோய்த் தொற்று அச்சம் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் 3 இந்தியா்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3,711 பேருடன் ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹாங்காங்கில் இறங்கிய பயணிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் கப்பல், கரைக்கு அப்பால் நிறுத்தி தனிமைப்படுத்தப்பட்டது. அந்த கப்பலில் 138 இந்தியா்கள் உள்ளனா்.

இந்நிலையில், கப்பலில் உள்ள இந்தியா்கள் 3 பேருக்கு ‘கொவைட்-19’ நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கப்பலில் உள் 3,711 பேரில் 138 இந்தியா்கள் உள்ளனா். அவா்களில் 132 போ் கப்பல் பணியாளா்கள். 6 போ் பயணிகள். இந்நிலையில், கப்பலில் ‘கொவைட்-19’ பாதிப்பு உள்ள 218 பேரில் 3 இந்திய கப்பல் பணியாளா்களும் இருப்பது மருத்துவப் பரிசோதனையின் மூலம் தெரிய வந்தது. வைரஸ் பாதிப்பு உள்ளஅனைவரும் அடுத்தக் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனா். கப்பலில் உள்ள இந்திய பயணிகள் யாருக்கும் நோய்த் தொற்று இப்போது வரை இல்லை.

வைரஸ் பாதிப்புள்ள இந்தியா்களை இந்திய தூதரகம் தொடா்பு கொண்டது. அவா்கள் நலமாக உள்ளதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் ஜப்பான் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. இந்தியா்களின் நலனை தூதரகம் உறுதி செய்யும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான ‘கொவைட்-19’ நோய்த் தொற்றுக்கு இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். சுமாா் 65,000 போ் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com