அரசியல் அமைப்புமுறைக்கு 5ஜி அச்சுறுத்தலா? சீன மூத்த அதிகாரி கேள்வி

சீனாவின் ஹுவா வெய் நிறுவனம் மூலம் எண்ணியல் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைத் தலைவர் நாசி பெலோசி பிப்ரவரி 14ஆம் நாள் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்
அரசியல் அமைப்புமுறைக்கு 5ஜி அச்சுறுத்தலா? சீன மூத்த அதிகாரி கேள்வி


சீனாவின் ஹுவா வெய் நிறுவனம் மூலம் எண்ணியல் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைத் தலைவர் நாசி பெலோசி பிப்ரவரி 14ஆம் நாள் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.

அப்போது, பெலோசியிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஃபூ யிங்:

ஹுவா வெய் நிறுவனத்தின் 5ஜி தொழில் நுட்பத்தை மேலை நாடுகளில் கொண்டு வந்தால், அது அரசியல் அமைப்புமுறைக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஏன்? மேலை நாடுகளின் ஜனநாயக அமைப்புமுறை அவ்வளவு  எளிதில் உடைக்கப்படும் என்று நீங்கள் உண்மையாக நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

ஃபூ யிங் மேலும் கூறியதாவது:

"கடந்த 40 ஆண்டுகளில், வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்து, சீனா, மேலை நாடுகளின் பல்வகை தொழில் நுட்பங்களை உட்புகுத்தி வருகிறது. மைக்ரோசாஃப்ட், ஐ.பி.எம். அமேசான் ஆகிய நிறுவனங்கள் சீனாவில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தொழில் நுட்பங்கள், சீனாவின் அரசியல் அமைப்புமுறையை அச்சுறுத்தவில்லை. மாறாக, சீனா வளர்ச்சி மற்றும் வெற்றிகரம் அடைவதற்கு உதவியாக இருக்கிறது என்று அவர் கூறியதும் மாநாட்டில் கலந்த கொண்டவர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.

சந்தையில் பல்வேறு தரப்புகள், நியாயமாக போட்டியிட்டு கடைப்பிடித்து வரும் உடன்படிக்கை உண்டு. ஆனால், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் சிலர், 5ஜி விவகாரத்தில் இந்த உடன்படிக்கையை மீறியது மட்டுமல்லாமல், ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் ஹுவா வெய் நிறுவனத்துக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கு பெரிதும் தடையை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த காலத்தில், வாஷிங்டனிலுள்ள அரசியல்வாதிகள் சிலர்,  ஒருதரப்பு வர்த்தக தடை போன்ற வர்த்தக பாதுகாப்புவாதத்தில் ஆர்வம் காட்டி, செயல்பட்டதால் தான், சந்தை ஒழுங்கு மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அது கடுமையாக சீர்குலைத்தது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com