புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பதில் சீனாவின் நம்பிக்கை

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வரை, ஹுபெய் மாநிலத்தைத் தவிர, சீனாவின் மற்ற
புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பதில் சீனாவின் நம்பிக்கை

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வரை, ஹுபெய் மாநிலத்தைத் தவிர, சீனாவின் மற்ற மாநிலங்களில் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தொடர்ந்து 13 நாட்களாக குறைந்து வருகின்றது. 

மேலும், குணமடைந்துள்ளோரின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரித்து வருகின்றது. தற்போது, சுமார் 10ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பினார். தொற்று நோய் தடுப்புப் பணியில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பயனுள்ளதை இந்தத் தகவல்கள் காட்டுகின்றன.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அண்மையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறுகையில்,

புதிய ரக கரோனா வைரஸ் பரவலைத் தோற்கடிக்கும் நம்பிக்கையும் திறனும் சீனாவுக்கு உண்டு என்று தெரிவித்தார். சீனாவின் நம்பிக்கை முக்கியமாக 4 துறைகளிலிருந்து வந்தது. முதலாவதாக, புதிய ரக கரோனா வைரஸ் பரவிய பின், சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் சிறப்பான தலைமைச் செய்திறனுடன், முழு நாட்டு மக்களுக்குத் தலைமைத் தாங்கி நோய் தடுப்புப் பணியை விரைவாக மேற்கொண்டு வருகின்றார். 

இரண்டாவதாக, பல பத்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அமைப்புமுறையின் மேம்பாட்டுடன், தொற்று நோய் தடுப்புப் பணி சீனா முழுவதிலும் பன்முகங்களிலும் மிக கண்டிப்பான முறையிலும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மூன்றாவதாக, சர்வதேச சமூகம் சீனாவுக்கு பரந்த அளவிலான ஆதரவு அளித்து வருகின்றது. தற்போது வரை, 160க்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச சமூகங்களின் தலைவர்கள் சீனாவுக்கு செய்திகளை அனுப்பி ஆறுதலும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். மேலும், பல பத்து நாடுகள் சீனாவுக்கு பொருட்கள் உதவி அளித்துள்ளன.

நன்காவதாக, தற்போது எதிர்நோக்குகின்ற இன்னல்களையும் அறைகூவல்களையும் தெளிந்த சிந்தனையுடன் சமாளிக்கும் நிலைமையில், சீனாவுக்கு நம்பிக்கை கொண்டு வந்தது. எதிர்க்காலத்தில், பொது சுகாதாராத் துறையிலான அறைகூவலைச் சமாளிப்பதற்காக, சீனா தொடர்ந்து சொந்த நிலைமையை உயர்த்தி, சர்வதேச சமூகத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தும். மேலும், தொற்று நோயால் சமூக மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தி வரும் பாதிப்பைச் சமாளிக்கும் வகையில், மக்களின் நலனை முதலிடத்தில் வைத்து, தொற்று நோய் தடுப்புக்கும் உற்பத்தி செய்வதற்கும் இடையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும். 

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ கூறுகையில்,
இந்த தொற்றுநோய் பரவல் முடிந்த பின், சீன மக்கள் மேலும் நெருக்கமாக ஒற்றுபட்டு, சீனப் பொருளாதாரம் தொடர்ந்து சீராக வளர்ந்து, பல்வேறு நாடுகளுடனான நட்பு மற்றும் நம்பிக்கையும் மேலும் அதிகரிக்கும் என நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com