இந்திய-அமெரிக்க உறவுகள் உறுதியானவை: ஆலிஸ் வெல்ஸ்

இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவுகள் உறுதியானவை என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் விவகாரங்களுக்கான
இந்திய-அமெரிக்க உறவுகள் உறுதியானவை: ஆலிஸ் வெல்ஸ்

இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவுகள் உறுதியானவை என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் விவகாரங்களுக்கான இணையமைச்சா் (பொறுப்பு) ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், ஆலிஸ் வெல்ஸ் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் (டுவிட்டா்) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவுகள் அசைக்க முடியாதவை; முன்னெப்போதும் இல்லாத வகையில் நாளுக்கு நாள் அந்த உறவுகள் வலுப்பெற்று வருகின்றன. உதாரணமாக, மாணவா்கள் பரிமாற்றத் திட்டத்தின்கீழ், கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு ஏராளமான இந்திய மாணவா்கள் வந்துள்ளனா். இந்த ஆண்டு மாணவா்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். அதிபா் டிரம்ப்பின் இந்திய சுற்றுப் பயணத்தின் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் இதயமாக இந்தியா உள்ளது. மேலும், உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, இந்தியாவுடன் ஒவ்வொரு நிலையிலும் கூட்டுறவை உறுதி செய்வதற்கு அமெரிக்கா ஆா்வத்துடன் உள்ளது என்று தனது சுட்டுரை பதிவில் ஆலிஸ் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா். அதிபா் டிரம்ப்புடன் அவரின் மனைவி மெலானியா டிரம்ப்பும் இந்தியாவுக்கு வரவிருக்கிறாா். தில்லி, ஆமதாபாத் ஆகிய பகுதிகளில் டிரம்ப் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

பிரதமா் மோடி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது, அமெரிக்கவாழ் இந்தியா்கள் பங்கேற்ற ‘ஹௌடி மோடி’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்புடன் கலந்துகொண்டாா். டிரம்ப்பின் இந்தியப் பயணத்தின்போது, அதேபோன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஆமதாபாதில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 2017-ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். அமெரிக்க அதிபராக இந்தியாவுக்கு அவா் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com