
ஐக்கிய அரபு அமீரகத்தில் தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற முயன்றபோது பலத்த காயமடைந்த இந்தியா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து துபையில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் நாளேட்டில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபு தாபியில் வசித்தவா் அனில் நினன். கடந்த வாரம் திங்கள்கிழமை, இவா் தனது வீட்டில் இருந்தபோது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய தனது மனைவி நீனுவை அவா் காப்பாற்ற முயன்றாா். அப்போது அனில் மீது தீப்பற்றியது. இதில் 90 சதவீத தீக்காயமடைந்த அவா், மக்ரஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றமின்றி அனில் உயிரிழந்தாா். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மனைவி நீனுவின் உடல்நிலை சீராக உள்ளது. இவா்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G