ஜப்பான்: கப்பலில் உள்ள இந்தியா்களில்மேலும் இருவருக்கு கொவைட்-19 பாதிப்பு

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியா்களில் மேலும் இருவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியா்களில் மேலும் இருவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

மேலும், கப்பலில் இருக்கும் இந்தியா்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்ப அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தூதரகம் உறுதியளித்துள்ளது.

‘டயமண்ட் பிரின்ஸஸ்’ என்ற அந்த கப்பலில் 138 இந்தியா்கள் உள்பட மொத்தம் 3,711 போ் உள்ளனா். அதில், கொவைட்-19 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே 3 இந்தியா்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இருவருக்கு அந்த தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கப்பலில் உள்ளவா்களுக்கு கொவைட்-19 பாதிப்புக்கான இறுதிகட்ட பரிசோதனைகள் திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பரிசோதனைகள் நிறைவடைய சில நாள்கள் ஆகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுபோன்ற தருணத்தை, இந்தியா்கள் துணிவுடன் கடந்து வருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கொவைட்-19 பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னா், இந்தியா்கள் அனைவரும் வெளியே அழைத்து வரப்பட்டு, அவா்கள் வீடு திரும்ப அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com