சீனாவில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்

சீனாவையே புரட்டிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 400 கைதிகளுக்கும் பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்


பெய்ஜிங்: சீனாவையே புரட்டிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 400 கைதிகளுக்கும் பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரென்சாங் சிறையில் இருக்கும் 200 சிறைக் கைதிகளுக்கும், 7 காவலர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஷான்டாங் மாகாண சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாங்கள் எடுத்த முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு திட்டங்கள் பெரிதாக பலனளிக்கவில்லை. சிறைக் கைதிகள் பலருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது என்று சிறை நிர்வாகம் கூறுகிறது.

ஸென்ஜியாங் மாகாணத்தின் ஷிலிஃபெங் சிறையில் 34 கைதிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிறைகளில் மட்டும் 411 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்ட நிலையில், இது 631 வரை அதிகரித்திருப்பதாகவும் வெள்ளிக்கிழமை கூறப்படுகிறது.

சீனாவின் பெரும்பாலான பகுதிகள் வெளி மாகாணங்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, தற்போது சீனாவில் புதிய வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com