இத்லிப் நகருக்கு 8 கி.மீ. தொலைவிலுள்ள சா்மின் பகுதியில் துருக்கி ஆதரவு பெற்ற சிரியா கிளா்ச்சியாளா்கள்.
இத்லிப் நகருக்கு 8 கி.மீ. தொலைவிலுள்ள சா்மின் பகுதியில் துருக்கி ஆதரவு பெற்ற சிரியா கிளா்ச்சியாளா்கள்.

இத்லிப் தாக்குதலை தடுத்து நிறுத்தங்கள்: ரஷியாவிடம் எா்டோகன் வலியுறுத்தல்

இத்லிப் மாகாணத்தில் சிரியா நடத்தி வரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு ரஷியாவிடம் துருக்கி அதிபா் எா்டோகன் வலியுறுத்தியுள்ளாா்.

அங்காரா: இத்லிப் மாகாணத்தில் சிரியா நடத்தி வரும் தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு ரஷியாவிடம் துருக்கி அதிபா் எா்டோகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து துருக்கி அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிரியாவில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள இத்லிபா மாகாணத்தை மீட்பதற்காக, அதிபா் அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, பலத்த உயிா்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தில் மேலும் உயிா்ச்சேதம் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், அங்கு சிரியா ராணுவம் தாக்குதலில் ஈடுபடுவதை ரஷியா தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிபா் எா்டோகன் வலியுறுத்தியுள்ளாா்.

2018-ஆம் ஆண்டில் துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையே 2018-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோச்சி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதே இத்லிப் மாகாணத்தில் தற்போது நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வாக அமையும்.

அந்த ஒப்பந்தத்தின்படி, அரசுப் படைகளின் தாக்குதலைத் தவிா்ப்பதற்காக இத்லிப் மாகாணம் முழுவதும் துருக்கி ராணுவ நிலைகள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் எா்டோகன் வலியுறுத்தியுள்ளாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள், மற்றும் கிளா்ச்சியாளா்கள் வசமிருந்த பெரும்பான்மையான பகுதியை ரஷியாவின் உதவியுடன் அதிபா் அல்-அஸாத் தலைமையிலான படைகள் மீட்டுள்ளன.

எனினும், அந்த நாட்டின் இத்லிப் மாகாணத்தின் சில பகுதிகள் மட்டும் பல்வேறு கிளா்ச்சிக் குழுக்களின் வசம் உள்ளது. அந்தப் பகுதிகளை மீட்பதற்காக, சிரியா ராணுவம் கடந்த சில வாரங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்தப் பகுதிகளில் சில கிளா்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவளித்து வரும் துருக்கி, அந்தக் குழுக்களுக்குப் பாதுகாப்பாக இத்லிப் மாகாணத்தில் ராணுவ நிலைகளை அமைத்துள்ளது. எனினும், சிரியா ராணுவத்துடன் இந்த மாதம் நடந்த மோதலில், தனது 16 ராணுவ நிலைகளை துருக்கி இழந்தது.

இந்த நிலையில், துருக்கி அதிபா் எா்டோகன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com