வங்கதேச நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு

வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்ததன் நூற்றாண்டு விழாவையொட்டி மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க இந்திய முன்னாள்
வங்கதேச நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு

டாக்கா: வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்ததன் நூற்றாண்டு விழாவையொட்டி மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. 
அவரோடு நேபாளத்தின் அதிபர் வித்யாதேவி பண்டாரிக்கும் வங்கதேசம் அழைப்பு விடுக்கிறது. 
இதுகுறித்து வங்கதேச அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "முன்னாள் அதிபர் முஜிப் பிறந்ததன் நூற்றாண்டையொட்டி மார்ச் 22, 23 தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, நேபாள குடியரசுத்தலைவர் வித்யாதேவி பண்டாரி ஆகியோருக்கு அதிபர் அப்துல் ஹமீது அழைப்புக் கடிதங்களை அனுப்ப உள்ளார்' என்றார். 
வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதை அந்நாட்டு நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஷிரின் ஷர்மின் செüதரி செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்துப் பேசியதையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது. வங்கதேச நாடாளுமன்றத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் உரைநிகழ்த்த இருப்பது இது மூன்றாவது நிகழ்வாக இருக்கும். 
வங்கேதசத்தின் முதல் அதிபராகவும், பின்னர் பிரதமராகவும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஏப்ரல் 17, 1971}ஆம் ஆண்டு பதவி வகித்து வந்தார். 1975 ஆகஸ்ட் 15}ஆம் தேதி படுகொலை செய்யப்படும் வரை அவர் அந்தப் பதவியில் இருந்தார். அவரது மகள் ஷேக் ஹசீனா தற்போதைய பிரதமராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com