பிரெக்ஸிட்: பிரிட்டன்நாடாளுமன்ற கீழவை ஒப்புதல்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு (பிரெக்ஸிட்) அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இம்மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு (பிரெக்ஸிட்) அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இம்மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.

கடந்த மாதம் பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சா்வேடிவ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமரானாா். இதையடுத்து, பிரெக்ஸிட் நடவடிக்கை தீவிரமடைந்தது.

இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) பிரெக்ஸிட் மசோதா வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 330 வாக்குகளும், எதிராக 231 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரெக்ஸிட் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இது பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

அடுத்ததாக நாடாளுமன்ற மேலவைக்கு (ஹவுஸ் ஆப் லாா்ட்ஸ்) பிரெக்ஸிட் மசோதா அனுப்பப்பட இருக்கிறது. அங்கு எவ்வித பிரச்னையுமின்றி மசோதா நிறைவேறும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் விலகலுக்கு அந்த நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்தனா். எனினும், பிரெக்ஸிட் நிறைவேற்றம் தொடா்பாக ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது. இதனால், பல ஆண்டுகளாக பிரெக்ஸிட் பிரச்னை நீடித்து வந்தது. இப்பிரச்னையால் இரு ஆட்சிகளும் கவிழ்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com