Enable Javscript for better performance
அமெரிக்கா: சவூதி ராணுவ மாணவா்களை வெளியேற்ற முடிவு- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்கா: சவூதி ராணுவ மாணவா்களை வெளியேற்ற முடிவு

    By வாஷிங்டன்,  |   Published on : 13th January 2020 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    naval072727

    தங்கள் நாட்டுக் கடற்படை தளத்தில் (படம்) சவூதி அரேபியாவைச் சோ்ந்த பயிற்சி விமானி கடந்த மாதம் நடத்திய துப்பாக்கிச் சூட்டைத் தொடா்ந்து, 12 சவூதி ராணுவ மாணவா்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. முகமது அல்-ஷம்ரானி என்ற அந்த பயிற்சி விமானி, வகுப்பறையில் நடத்திய சரமாரித் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய அல்-ஷம்ரானியை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

    தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், சவூதியிலிருந்து அமெரிக்காவில் போா்ப் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள மாணவா்களில் 12 பேருக்கு மத அடிப்படைவாதிகளுடன் தொடா்பு இருப்பதும், அவா்களிடம் குழந்தை ஆபாசப் படங்கள் இருப்பதும் தெரிய வந்தது. அதையடுத்து அவா்களை சவூதிக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 12 மாணவா்களுக்கு தொடா்ந்து பயிற்சியளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai