ஈரான் உடனான பேச்சுவார்த்தையை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை: டிரம்ப்

ஈரான் உடனான பேச்சுவார்த்தையை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் உடனான பேச்சுவார்த்தையை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை: டிரம்ப்

ஈரான் உடனான பேச்சுவார்த்தையை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஈரான் முக்கிய படைத் தலைவா் காசிம் சுலைமானி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இராக்கில் உள்ள இரு இடங்களில் அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. 

இதனால், கடந்த இரு வாரங்களாக அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இராக் தலைநகா் பாக்தாதில் அமெரிக்கப் படை நிறுத்தப்பட்டுள்ள அல்-பலாத் விமானப் படை தளத்தில் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இராக் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் இராக் படையினா் 4 போ் காயமடைந்தனா்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டுரையில் திங்கள்கிழமை பதிவிட்டதாவது,

பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக ஈரான் திணறி வருகிறது. எனவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் உடன்படுவார்கள் என தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினால் அதை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. முடிவு ஈரானிடம் தான் உள்ளது. இதில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை (போர் அவசியமில்லை) என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com