திபெத்தில் தேசிய இன ஒற்றுமைக்கான முதலாவது சட்டம்

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான
திபெத்தில் தேசிய இன ஒற்றுமைக்கான முதலாவது சட்டம்

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான முன்மாதிரி பிரதேசத்தின் கட்டுமானம் பற்றிய விதிமுறை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 11ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தில் 11ஆம் தேதி வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தன்னாட்சிப் பிரதேச நிலையில் தேசிய இன ஒற்றுமைக்காக உள்ளூர் சட்ட விதியை திபெத் வகுப்பது இதுவே முதன்முறை. இப்பிரதேசத்தின் சட்டமியற்றல் துறையில் நிலவிய ஒரு வெற்றிடத்தை இது நிரப்பியுள்ளது. 2020ஆம் ஆண்டு மே முதல் நாள் இவ்விதிமுறை நடைமுறைக்கு வர உள்ளது.

பண்டைகாலம் தொட்டே திபெத் சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். பல்வேறு இன மக்கள் அனைவரும் சீனத் தேசத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களாவர். நாட்டின் ஒன்றிணைப்பைப் பேணிக்காத்து, தேசிய இன ஒற்றுமையை வலுப்படுத்தி, பிரிவினை வாதத்தை உறுதியாக எதிர்ப்பது என்பது பல்வேறு இன மக்களின் பொது பொறுப்பு மற்றும் கடப்பாடு என்று இவ்விதிமுறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com