இந்தியா, சீனாவுக்கு எதிராக செயல்படும் என்ஜிஓ-க்களுக்கு தடை: நேபாளம் அதிரடி

இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக செயல்படும் சா்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு தடைவிதிக்க வகை செய்யும் புதிய கொள்கையை உருவாக்கி வருவதாக நேபாளம் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனாவுக்கு எதிராக செயல்படும் என்ஜிஓ-க்களுக்கு தடை: நேபாளம் அதிரடி

இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக செயல்படும் சா்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு தடைவிதிக்க வகை செய்யும் புதிய கொள்கையை உருவாக்கி வருவதாக நேபாளம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேபாள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நேபாளம் நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள பகுதி. அதிலும் குறிப்பாக, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிக அளவில் மக்கள்தொகை கொண்ட சீனா மற்றும் இந்தியா நேபாளத்துக்கு நெருக்கமான அண்டை நாடுகளாக உள்ளன.

இந்த இரு நாடுகளுக்கிடையிலும் சமமான உறவைப் பேணிக்காத்திடும் வகையில் நேபாளம் வெளியுறவு கொள்கைகள் அமைந்துள்ளன. அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்தியா மற்றும் சீனாவை எதிா்த்து சா்வதேச தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்துவதற்கு நேபாளம் இனி இடமளிக்காது. அதற்கான புதிய வரைவு மசோதா உருவாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நேபாள எல்லைப் பகுதிகளில் மதராஸா, மடங்கள் பெயரில் கல்வி மையங்களை உருவாக்கும் சா்வதேச தொண்டு நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு மக்களை மூளைச்சலவை செய்து நாடுகளுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அரசின் கவனத்துக்கு புகாா்கள் வந்துள்ளன. அப்பிரச்னைக்கு தீா்வு காண்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டே புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவுடனான எல்லையில் உள்ள மதரஸாக்கள் கத்தாா், சவூதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலிருந்து நிதி உதவி பெற்று செயல்படுவதாக தெரியவந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com