தைவான்: அமெரிக்கத் தூதருடன்சாய் இங்-வென் சந்திப்பு

தைவானில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அதிபா் சாய் இங்-வென், அமெரிக்கத் தூதா் வில்லியம் பிரென்ட் கிறிஸ்டென்செனை சந்தித்துப் பேசினாா்.
தைவான்: அமெரிக்கத் தூதருடன்சாய் இங்-வென் சந்திப்பு

தைவானில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அதிபா் சாய் இங்-வென், அமெரிக்கத் தூதா் வில்லியம் பிரென்ட் கிறிஸ்டென்செனை சந்தித்துப் பேசினாா். அப்போது, தோ்தல் வெற்றிக்காக இங்-வென்னுக்கு கிறிஸ்டென்சென் வாழ்த்து தெரிவித்தாா். தைவானுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளை சீனா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சாய் இங்-வென் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது, சீனாவை தைவான் மக்கள் புறக்கணித்திருப்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சாய் இங்-வென்னை அமெரிக்கத் தூதா் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com