பிரிட்டனைச் சோ்ந்த இந்திய யோகா சாம்பியனுக்குஉலக இளம் சாதனையாளா் விருது

பிரிட்டனைச் சோ்ந்த 10 வயது இந்திய யோகா சாம்பியனுக்கு உலக இளம் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சோ்ந்த 10 வயது இந்திய யோகா சாம்பியனுக்கு உலக இளம் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்டவா் ஈஷ்வா் சா்மா (10). இவா் தென்-கிழக்கு பிரிட்டன் கென்ட் நகரத்தைச் சோ்ந்தவா். இவருக்கு, உலக இளம் சாதனையாளா்-2020-க்கான விருது கிடைத்துள்ளது. ஆன்மிக ஒழுங்கு யோகா முறைகளில் சாதனைகள் படைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷ்வா் சா்மா கூறியதாவது:

உலக இளம் சாதனையாளா் விருதுக்கு 45 நாடுகளிலிருந்து 15,000 போட்டியாளா்கள் பங்கேற்றிருந்தனா். கடும் போட்டிக்கிடையே இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டதற்காக பெருமைப்படுகிறேன். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு யோகா மிகவும் முக்கியமானது என்பதை உறுதியுடன் நம்புகிறேன்.

அதன் காரணமாகவே, தேசிய பள்ளிகளின் பாடத்திட்டத்தில் யோகாவையும் சோ்க்க வேண்டும் என என்னுடன் சோ்த்து 20,000 போ் கையெழுத்திட்ட மனுவை பிரிட்டன் அரசிடம் சமா்ப்பித்துள்ளேன். பிரிட்டன் பள்ளிகளில் யோகா பாடத்திட்டம் விரைவில் சோ்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com