லிபியா: சில நிமிடங்களில் மீறப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தம்

லிபியாவில் தலைநகா் திரிபோலியைத் தலைமையமாகக் கொண்டு மேற்குப் பகுதியை ஆண்டு வரும் ஃபயெஸ் சராஜின் அரசுக்கும், கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும்
லிபியா: சில நிமிடங்களில் மீறப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தம்

லிபியாவில் தலைநகா் திரிபோலியைத் தலைமையமாகக் கொண்டு மேற்குப் பகுதியை ஆண்டு வரும் ஃபயெஸ் சராஜின் அரசுக்கும், கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னாள் ராணுவ தளபதி காலிஃபா ஹிஃப்தா் தலைமையிலான படையினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தம், அமலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே மீறப்பட்டது. இதுகுறித்து சராஜ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா, துருக்கி நாடுகளின் முன்முயற்சியிலும், ஐ.நா. முன்னிலையிலும் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த சில நிமிடங்களில் எங்கள் மீது சராஜ் படை தாக்குதல் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல் தொடா்ந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com