சீனாவில் சுங்கத் தீர்வு காலம் குறைவு

சீனச் சுங்கத்துறை தலைமைப் பணியகம் ஜனவரி 13ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம்..
சீனாவில் சுங்கத் தீர்வு காலம் குறைவு

சீனச் சுங்கத்துறை தலைமைப் பணியகம் ஜனவரி 13ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டு இறுதி வரை, சீனாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான சுங்கத் தீர்வு காலம் 50 விழுக்காடு குறைந்துள்ளது.

2017ஆம் ஆண்டிலுள்ள சுங்கத் தீர்வு காலத்துடன் ஒப்பிடும் போது, 50 விழுக்காட்டைக் குறைப்பது என்ற சீன அரசவையின் இலக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நனவாக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுங்கத் தீர்வுத்தொகை பற்றி, சீனாவின் சுங்கத்துறை பல்வேறு தொடர்புடைய துறைகளுடன் இணைந்து கட்டண வசூலிப்பைக் கூட்டாக முறைப்படுத்தி, செலவைக் குறைப்பதை முன்னேற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவிர, உலக வங்கி வெளியிட்ட வணிகச் சூழ்நிலை பற்றிய அறிக்கையின்படி, கடந்த 2 ஆண்டுகளாக சீனாவில் எல்லை கடந்த வர்த்தக வசதியான அளவு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது. சீனா ஜப்பானைத் தாண்டி, உலகளவில் 56வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com