சீன வெளிநாட்டு வர்த்தக அளவின் புதிய சாதனை

சீனச் சுங்கத்துறை தலைமைப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளி விவரங்களின் படி,
சீன வெளிநாட்டு வர்த்தக அளவின் புதிய சாதனை

சீனச் சுங்கத்துறை தலைமைப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட புதிய புள்ளி விவரங்களின் படி, 2019ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 31 லட்சத்து 54 ஆயிரம் கோடி யுவானை எட்டியது.

இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 3.4 விழுக்காடு அதிகமாகும். உலக வர்த்தக அதிகரிப்பு தேக்க நிலையில் சிக்கியுள்ள போதிலும், சீன வெளிநாட்டு வர்த்தகம் புதிய சாதனையைப் பெற்றுள்ளது.

சீனப் பொருளாதாரத்தின் உயிராற்றலை இது கோடிட்டுக்காட்டியதோடு, உலகப் பொருளாதார வீழ்ச்சியை எதிர்ப்பதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் முக்கிய சாதனைகளில் 4 துறைகள் உள்ளன.

முதலாவது, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டமைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

இரண்டாவது, பல துறை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பல்வகை சந்தைகளை வளர்ப்பதில், சீனா மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது.

மூன்றாவது, வெளிநாட்டு வர்த்தகத்தில், தனியார் தொழில் நிறுவனங்கள் மேன்மேலும் முக்கிய பங்காற்றியுள்ளது.

நான்காவது, சர்வதேச போட்டியில் சீன ஏற்றுமதி பொருட்களின் மேம்பாடு அதிகரித்து வருகின்றது.

நாட்டு பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இலக்கு வெளிநாட்டு வர்த்தகமாகும். கடந்த ஆண்டில், வரி குறைப்பு, வர்த்தக சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளதால், வெளிநாட்டு வர்த்தகத்தின் இயக்காற்றல் அதிகரித்து வருகிறது.

2020ஆம் ஆண்டில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் சீராக அதிகரிப்பதோடு, அதன் உலக போட்டி ஆற்றல் தொடர்ந்து உயர்ந்து, உலக பொருளாதார அதிகரிப்புக்கும் முக்கிய பங்காற்றும் என்று நம்பப்படுகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com