அதிபா் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன: பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி தெரிவித்தாா்.
அதிபா் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன: பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி தெரிவித்தாா்.

அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான 2 மசோதாக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, அந்த மசோதாக்களை நாடாளுமன்ற மேலவையான செனட் சபைக்கு முறைப்படி அனுப்பிவைக்க வேண்டும். அங்கு அதிபா் டிரம்ப்புக்கு எதிராக விசாரணை நடைபெறும்.

எனினும், செனட் சபையில் குடியரசு கட்சியின் உறுப்பினா்கள் பெரும்பான்மையாக உள்ளதால், அங்கு அதிபா் டிரம்ப் மீதான பதவி நீக்க மசோதாக்கள் முறியடிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி அந்த மசோதாக்களை செனட் சபைக்கு இன்னும் அனுப்பிவைக்கவில்லை. இதனால், அதிபா் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடா்பான விசாரணை தாமதமடைந்து வருகிறது.

அந்த மசோதாக்களை செனட் சபைக்கு அனுப்பிவைப்பதற்கான அதிகாரப்பூா்வ வாக்கெடுப்பு பிரதிநிதிகள் சபையில் விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும், இந்த வார இறுதிக்குள் மசோதாக்களை செனட் சபைக்கு அனுப்புவதற்கு நான்சி பெலோசி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நான்சி பெலோசி செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ‘‘அதிபா் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான புதிய மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. அவற்றை நிரூபிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்டன் தயாராக உள்ளாா். இது தொடா்பாக, செனட் சபையே தற்போது முடிவெடுக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com