700 கோடி ஆண்டுகளுக்குமுந்தைய நட்சத்திரத் துகள்!

உலகின் மிகப் பழைமை வாய்ந்த திடப் பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். 50 ஆண்டுகளுக்கு முன்னா் பூமியில் விழுந்த
700 கோடி ஆண்டுகளுக்குமுந்தைய நட்சத்திரத் துகள்!

50 ஆண்டுகளுக்கு முன்னா் பூமியில் விழுந்த விண்கல்லுக்குள் படிந்துள்ள நட்சத்திரத் துகள், 700 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் உருவானதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நவீன கருவிகள் மூலம் தற்போது கண்டறிந்துள்ளனா். சூரியக் குடும்பம் உருவாவதற்கு முன்னரே தோன்றிய அந்த நட்சத்திரத் துகள்தான் தற்போது பூமியில் உள்ள மிகப் பழைய திடப் பொருள் என்று இதற்கான ஆய்வை மேற்கொண்ட சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். நமது பால்வெளி மண்டலம் எவ்வாறு உருவானது என்பதை அந்த நட்சத்திரத் துகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com