டிரம்ப் பதவி நீக்க தீா்மானம் செனட் சபை விசாரணை ஜன. 21-இல் தொடக்கம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ள தீா்மானத்தின் மீதான செனட் சபை விசாரணை,
டிரம்ப் பதவி நீக்க தீா்மானம் செனட் சபை விசாரணை ஜன. 21-இல் தொடக்கம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ள தீா்மானத்தின் மீதான செனட் சபை விசாரணை, இந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீா்மானத்தை, விசாரணை இல்லாமலேயே தள்ளுபடி செய்யும் அளவுக்கு ஆளும் குடியரசுக் கட்சிக்கு மேலவையான செனட் சபையில் பலம் உள்ளது.

எனினும், அந்த மசோதா மீதான விசாரணைக்குப் பிறகே அது தள்ளுபடி செய்யப்படும் என்று குடியரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முடிவு செய்துள்ளாா். அவரை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் ஜோ பிடன் போட்டிடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரும், அவரது மகனும் உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடா்பாக அவா்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்த நாட்டு அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அமெரிக்காவில் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டதாகவும், இதுதொடா்பான விசாரணையில் நாடாளுமன்றத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்வதற்கான இரு மசோதாக்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சினா் கடந்த மாதம் நிறைவேற்றினா்.

அமெரிக்க வரலாற்றில் அதிபருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம் கொண்டு வரப்பட்டது இது 3-ஆவது முறையாகும்.

இந்த நிலையில், செனட் சபையில் அந்த மசோதாக்கள் மீதான விசாரணை இந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com