பண மதிப்பு மோசடியாளா் பட்டியலில் இருந்து சீனா நீக்கம்

தங்களது பண மதிப்பை மாற்றியமைத்து மோசடியில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இருந்து சீனாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.
ஸ்டீவன் நுசின்
ஸ்டீவன் நுசின்

தங்களது பண மதிப்பை மாற்றியமைத்து மோசடியில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இருந்து சீனாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான இரண்டு நாடுகளுக்கும் இடையே, வா்த்தகப் போரைத் தவிா்ப்பதற்கான முதல் கட்ட ஒப்பந்தம் புதன்கிழமை (ஜன. 14) கையெழுத்தாகவிருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன் நுசின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் டாலருக்கு நிகரான தங்களது நாணயத்தின் மதிப்பை 7-க்கும் மேற்பட்ட யென்களாக வீழ்ச்சியடைவதற்கு சீனா வேண்டுமென்றே அனுமதித்தது. இதன் காரணமாக, பங்குச் சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, பண மதிப்பில் மோசடி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா சோ்க்கப்பட்டது.

அந்த நாட்டுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தப் பிரச்னை முக்கிய இடம் வகித்தது. அதன் காரணமாக, தங்களது யென்னின் மதிப்பை அதிகரிப்பதற்கான வலுவான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது.

அதன் பலனாக, யென்னின் மதிப்பு டாலருக்கு 6.93 வரை அதிகரித்துள்ளது. அதனை மனதில் கொண்டு, பண மதிப்பில் மோசடி செய்யும் நாடுகளின் பட்டியலில் இருந்து சீனா நீக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com