அமெரிக்கா, சீனா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா, சீனா இடையிலான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீனத் தலைமை ஆலோசகர் லியு ஹீ ஆகியோரது முன்னிலையில் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை கையெழுத்தானது. 
அமெரிக்கா, சீனா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா, சீனா இடையிலான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீனத் தலைமை ஆலோசகர் லியு ஹீ ஆகியோரது முன்னிலையில் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை கையெழுத்தானது. 
  
இந்த முதல்கட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் பயிர்கள் மற்றும் பிற ஏற்றுமதிகளை வாங்குவது, அமெரிக்க தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பினை வழங்குவது, புதிய அமலாக்க வழிமுறைகள் உள்ளிட்டவற்றுக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்மூலம் உலகின் இரண்டு மேலாதிக்க பொருளாதார சக்திகளுக்கிடையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாளுக்கு நீடித்து வந்த மோதலுக்கு முடிவு ஏற்படத் தொடங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. இது உலகளாவிய வர்த்தகத்தை நிம்மதியடையச் செய்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுடனான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது,

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மறக்க முடியாதது. சீனாவுடன் முன்பு எப்போதும் இல்லாத இந்த முக்கியமான நடவடிக்கையை அமெரிக்கா இன்று எடுத்துள்ளது. இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையில் நியாயமான மற்றும் பரஸ்பர வர்த்தகத்தை உறுதி செய்துள்ளோம்.

மேலும் கடந்த கால தவறுகளை சரி செய்து வருகிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நன்றி. இதன் எதிர்காலம் வெகு தொலைவில் இல்லை.

முதலில் இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடுமையாக அமைந்தன. ஆனால், தற்போது நம்பமுடியாத முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான முடிவை சீனாவிடம் விட்டுவிட்டேன். ஏனென்றால் பேச்சுவார்த்தை நடத்த இனியும் வேறு நிபந்தனைகள் இல்லை என்று தெரிவித்தார்.

பின்னர், சீனத் தலைமை ஆலோசகர் லியு ஹீ, சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு எழுதிய கடிதத்தை வாசித்தார். அதில், இருநாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் சீனா, அமெரிக்கா மற்றும் அனைத்து உலக நாடுகளுக்கும் நன்மை ஏற்படுத்தக்கூடியது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com