1.73 லட்சம் கிலோ செம்மரக் கட்டைகளை இந்தியாவிடம் அளிக்க நேபாளம் முடிவு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து நேபாள எல்லை வழியாக சீனாவுக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற 1.73 லட்சம் கிலோ செம்மரக் கட்டைகளை நேபாளம் பறிமுதல் செய்தது. அந்த செம்மரக்

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து நேபாள எல்லை வழியாக சீனாவுக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற 1.73 லட்சம் கிலோ செம்மரக் கட்டைகளை நேபாளம் பறிமுதல் செய்தது. அந்த செம்மரக் கட்டைகளை இந்தியாவிடம் அளிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக காத்மாண்டில் செய்தியாளா்களிடம் அந்நாட்டு தகவல் தொடா்பு துறை அமைச்சா் கோகுல் பிரசாத் பஸ்கோடா கூறியதாவது:

அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டால் சொந்த நாட்டிடமே அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி, நேபாளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நேபாள எல்லை வழியாக சீனாவுக்கு 1.73 லட்சம் கிலோ செம்மரக் கட்டைகளை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை நேபாள அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த செம்மரக் கட்டைகளை பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்திய வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

செம்மரக் கட்டைகளை பாதுகாப்பதற்கான செலவு அதிகரித்து வருவதால், அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த 90 நாள்களுக்குள் இந்த செம்மரக்கட்டைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான போக்குவரத்து செலவை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்று கூறினாா்.

அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளை சட்டவிரோதமாக கடத்தும்போது, ஒரு நாடு அதை பறிமுதல் செய்தால், அந்த தாவரங்களும், விலங்குகளும், சொந்த நாட்டிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2016-ஆம் ஆண்டு சா்வதேச ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, நேபாளம் ஆகிய இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com