உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்கான காரணம்

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 17ஆம் தேதி சீனப் பொருளாதாரத்தின் 2019ஆம் ஆண்டறிக்கையை வெளியிட்டது.
உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்கான காரணம்

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 17ஆம் தேதி சீனப் பொருளாதாரத்தின் 2019ஆம் ஆண்டறிக்கையை வெளியிட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் பெரிதும் அதிகரித்து வரும் நிலையில் உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் விசைபொறியாக சீனப் பொருளாதாரம் தொடர்ந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் அளவை விட தரம் மேலும் முக்கியமானது. கடந்த ஆண்டில் சீனத் தொழில்களின் கட்டமைப்பு மேம்பட்டுவரும் போக்கு தெளிவாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நுகர்வு துறையின் தகுதிநிலை மேலும் வலுவடைந்தது. இவற்றின் மூலம், உயர்தர வளர்ச்சி என்பது சீனப் பொருளாதாரத்தில் திறவுகோலாக மாறியுள்ளதை எளிதில் கண்டறியலாம்.

சீனப் பொருளாதாரச் சாதனைக்கு சீனச் சந்தையின் மேம்பாடு இன்றியமையாதது. 140 கோடி மக்கள் தொகை, உலகளவில் மிகப்பெரிய நடுநிலை வருமானமுடையவர் குழு ஆகியவை சீனாவின் தனிச்சிறப்புமிக்க மேம்பாடு. இதனிடையே சீனக் கொள்கைகளும் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனளித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சீன அரசு முன்வைத்துள்ள அரசு சார் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்தம், வணிகச் சூழல் மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் படிப்படியாகப் பயனளிக்கத் தொடங்கியுள்ளன.

மேலும், சீனா தொடர்ந்து திறப்பு அளவை விரிவாக்கி, உலகத்துடனான தொடர்புகளை அதிகரித்து வருகிறது. சுங்கவரி குறைப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்டவற்றின் மூலம், சீனப் பொருளாதாரத்தின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் நிறைய நம்பிக்கையைக் காட்டியுள்ளனர்.

2020ஆம் ஆண்டில் உயர்தர வளர்ச்சியைச் சீனா உறுதியாகக் கடைப்பிடித்து, உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து வலுவான இயக்காற்றலை வழங்கி வருகிறது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com