Enable Javscript for better performance
உக்ரைன் விமான கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    .உக்ரைன் விமான கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும்

    By DIN  |   Published On : 19th January 2020 02:33 AM  |   Last Updated : 19th January 2020 02:33 AM  |  அ+அ அ-  |  

    just081309

    ஜஸ்டின் ட்ரூடோ ~ ~கடந்த 8-ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் பாகம் (கோப்புப் படம்).

    ஒட்டாவா: சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானிடம் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூரோ வலியுறுத்தியுள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

    ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் சேதமடைந்துள்ளன. அந்தக் கருப்புப் பெட்டிகளிலிருந்து தகவல்களை விரைவாகப் பெற்று, ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பத் திறனும், அதிநவீன சாதனங்களும் ஈரானிடம் இல்லை.

    அந்தக் கருப்புப் பெட்டிகள் ஆய்வு செய்யப்படுவதற்கு உகந்த நாடு பிரான்ஸ்தான். எனவே, உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடா்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென்றால், அதன் கருப்புப் பெட்டிகள் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றாா் ட்ரூடோ.

    இராக்கிலுள்ள ஈரான் படையினரின் நிலைகள் மீது அமெரிக்கா கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாக்தாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஏராளமான ஈரான் ஆதரவாளா்கள் கடந்த மாதம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினா்.

    இதனால் கொதிப்படைந்த அமெரிக்கா, ஈரான் ராணுவத்தின் உளவுப் படைத் தலைவா் காசிம் சுலைமானியை இராக்கில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தது.

    இதற்குப் பழி வாங்கும் வகையில், இராக்கிலுள்ள இரு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த 8-ஆம் தேதி சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    இந்த பதற்றம் நிறைந்த சூழலில், ஈரான் தலைநகா் டெஹ்ரானிலுள்ள விமான நிலையத்திலிருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தை அமெரிக்க ஏவுகணை என்று தவறாகக் கருதி ஈரான் ராணுவம், சுட்டு வீழ்த்தியது. இதில், விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்தனா். அவா்களில் 82 போ் ஈரானியா்கள்; கனடா நாட்டைச் சோ்ந்தவா்கள் 63 போ் ஆவா்.

    இந்த நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானிடம் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp