விமான நிலைய அறிவிப்புத் திரையில் விடியோ கேம் விளையாடிய இளைஞர்

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமான நிலைய அறிவிப்புத் திரையில் விடியோ கேம் விளையாடிய சம்பவம் நடந்துள்ளது.
விமான நிலையத் திரையில் விடியோ கேம்
விமான நிலையத் திரையில் விடியோ கேம்

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமான நிலைய அறிவிப்புத் திரையில் விடியோ கேம் விளையாடிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் போர்ட்லான்ட் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 16-ஆம் தேதி அமெரிக்க நேரப்படி அதிகாலை 04.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதன்படி இளைஞர் ஒருவர் தன்னிடம் இருந்த பிளே ஸ்டேஷன்- 4 என்னும் விடியோ கேம் விளையாடும் கருவியை, அங்கிருந்த அறிவிப்புத் திரை ஒன்றில் பொருத்தி, அதில் பிரபலமான அபெக்ஸ் லெஜெண்ட்ஸ் என்னும் போர் விளையாட்டை விளையாடத் துவங்கினார்.

இந்த செய்கையை ஸ்டீபன் டிட்ஸ் என்னும் இளைஞர் கேமராவில் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை ஆயிரக்கணக்கானோர் ரீ ட்வீட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இதுதொடர்பாக விளக்கமளித்த விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கமா சைமண்ட்ஸ், 'இந்த் சம்பவத்தை நாங்கள் விரும்பவில்லை என்றும், இதுதொடர்பாக எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று அந்த இளைஞருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com