டிக்டாக்கின் புதிய அதிரடி முயற்சி

இளைஞர்களின் இதயகீதமாக விளங்கும் டிக்டாக் செயலி, உலகின் முன்னணி லாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து
டிக் டாக்
டிக் டாக்

இளைஞர்களின் இதயகீதமாக விளங்கும் டிக்டாக் செயலி, உலகின் முன்னணி லாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து, ஆல் தி டிஃபெரன்ஸ் (#AllTheDifference) எனும் சவாலை அறிமுகப்படுத்தி உள்ளது. 

ஜனவரி 21 முதல் ஜனவரி 27 வரை, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, இந்தியா, கொரியா, தாய்லாந்து, வியட்நாம், கொலம்பியா, பிரேசில், மெக்ஸிகோ, எகிப்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பல உலகளாவிய சந்தைகளில் டிக்டாக் பயனர்கள் ஆல் தி டிஃபெரன்ஸ்  சவாலை சந்திப்பதன் மூலம் எல்லாவகை வேற்றுமைகளுக்குமிடையே  ஒற்றுமையைக் கொண்டாட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

டிக்டாக் பயனர்கள் தங்களை தைரியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படுத்திக் கொள்ள இதுவொரு வாய்ப்பாகும்.  இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள "ஐ ஸே" என்ற ஸ்டிக்கர் தற்போது பயன்பாட்டில் கிடைக்கிறது.

படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கும் மகிழ்ச்சியைக் அள்ளித் தருவதற்கும் ஒரு தளமாக, டிக்டாக் உள்ளது. தற்போது சமூகக் கடமையாற்றவும் விரும்புகிறது, ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் ஏன் ஒலிக்க வேண்டும் என்றும் இந்த உலகை இன்னும் சகிப்புத்தன்மையுள்ள இடமாக மாற்ற அவர்கள் செய்த முயற்சிகள் என்னவென்று அனைவரும் அறிந்து கொள்ள இதுவொரு சிறிய முயற்சி என்று தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com