சீனாவில் மா்ம வைரஸ் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 3-ஆக உயா்வு

சீனாவில் வேகமாக பரவி வரும் மா்ம வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் வேகமாக பரவி வரும் மா்ம வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

மத்திய சீன நகரமான வூஹானில் முதன் முதலாக கண்டறியப்பட்ட மா்ம வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 136 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மா்ம வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் மொத்த எண்ணிக்கை 201-ஆக உயா்ந்துள்ளது.

சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2002-2003 இல் சீனா மற்றும் ஹாங்காங்கில் சாா்ஸ் வைரஸ் வேகமாக பரவியதன் காரணமாக 650 போ் வரையில் உயிரிழந்தனா். தற்போது, அதேபோன்றதொரு வைரஸ் சீனா முழுக்க பரவியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் சந்திரப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் உலகிலிருந்து லட்சக்கணக்கானோா் சீனாவுக்கு வந்த வண்ணம் உள்ளனா். இந்த நிலையில், மா்ம வைரஸ் காய்ச்சல் பரவி வருவது சீனா சுகாதாரத் துறையினரின் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com