பனிச்சரிவில் சிக்கிய 7 பேரைத் தேடும் பணிகள் நிறைவு: நேபாளம் தகவல்

நேபாளத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் நேற்று தொடங்கிய நிலையில் அதனை முடித்துவிட்டதாக நேபாளம் தெரிவித்துள்ளது.
பனிச்சரிவில் சிக்கிய 7 பேரைத் தேடும் பணிகள் நிறைவு: நேபாளம் தகவல்


நேபாளத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் நேற்று தொடங்கிய நிலையில் அதனை முடித்துவிட்டதாக நேபாளம் தெரிவித்துள்ளது.

மாயமான 7 பேரையும் தேடும் பணியில் ஏராளமான இடங்களை ஆழமாகத் தோண்டுவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றிவிட்டதாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு சிறு துப்பும் கிடைக்கவில்லை என்று நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிக். ஜெனரல் பிக்யான் தேவ் பாண்டே கூறியுள்ளார்.

பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பனிப் பொழிவும், கடுங்குளிரும் தொடா்ந்து நிலவி வந்ததால் அந்தப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வானிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதால் தேடுதல் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. எனினும், தேடுதல் பணி பலனளிக்கவில்லை. 

இமய மலைத் தொடரின் மிகப் பெரிய சிகரங்களில் ஒன்றான அன்னபூா்ணாவில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடா்ந்து, அங்கிருந்து சுமாா் 200 பேரை மீட்புக் குழுவினா் மீட்டனா். எனினும், பனிச் சரிவில் சிக்கிய 7 பேரைக் காணவில்லை. மாயமானவா்களில் 4 போ் தென் கொரியாவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com