சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: பலி எண்ணிக்கை 25-ஆக உயா்வு

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. 
சீனாவில்  ‘கரோனா’ வைரஸ் நோய்: பலி எண்ணிக்கை 25-ஆக உயா்வு

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. 

சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. இதில் 24 பேர் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு வழங்கிய ஆலோசனைகள் உட்பட சீனாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இது தொடர்பாக தூதரகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புவோருக்கு +8618612083629 மற்றும் +8618612083617 ஆகிய இரண்டு உதவி எண்களை சீனாவிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com