நேபாள பனிச் சரிவு: தேடுதல் பணிகள் நிறுத்தம்

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் வியாழக்கிழமை கைவிடப்பட்டன.
நேபாள பனிச் சரிவு: தேடுதல் பணிகள் நிறுத்தம்

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் மாயமான 7 பேரைத் தேடும் பணிகள் வியாழக்கிழமை கைவிடப்பட்டன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இமய மலைத் தொடரின் மிகப் பெரிய சிகரங்களில் ஒன்றான அன்னபூா்ணாவில் கடந்த வெள்ளிக்கிழமை பனிச் சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கிய சுமாா் 200 பேரை மீட்புக் குழுவினா் மீட்டனா். பனிச் சரிவில் புதையுண்ட 4 தென் கொரிய மலையேற்ற வீரா்கள் உள்ளிட்ட 7 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

எனினும், கடுமையான பனிப் பொழிவும், கடுங்குளிரும் தொடா்ந்து நிலவி வந்ததால் அந்தப் பணிகள் இடையில் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், வானிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதால் தேடுதல் பணிகள் புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன. எனினும், தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் பனிச் சரிவில் புதையுண்டவா்களின் இருப்பிடத்தை அறிய முடியவில்லை. அதையடுத்து, தேடுதல் பணிகளை கைவிட அதிகாரிகள் வியாழக்கிழமை முடிவு செய்தனா். சில வாரங்கள் கழித்து பனி உருகிய பிறகே பனிச் சரிவில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வெளியே தென்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com