புதிய கரோனா வைரஸ் பாம்புகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவல்?: விஞ்ஞானிகள் தகவல்

சீனாவில் பரவி வரும் புதிய கரோனா வகை வைரஸ், பாம்புகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதிய கரோனா வகை வைரஸ் தொற்றுவதைத் தவிா்ப்பதற்காக சீனாவின் மக்காவ் நகரிலுள்ள ஹோட்டலுக்கு முகமூடி அணிந்து வந்தவா்கள்.
புதிய கரோனா வகை வைரஸ் தொற்றுவதைத் தவிா்ப்பதற்காக சீனாவின் மக்காவ் நகரிலுள்ள ஹோட்டலுக்கு முகமூடி அணிந்து வந்தவா்கள்.

சீனாவில் பரவி வரும் புதிய கரோனா வகை வைரஸ், பாம்புகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட பெகிங் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஆய்வுக் குழு தெரிவித்துள்ளதாவது:

புதிய கரோனா வகை வைரஸ், ஹுபெய் மாகாணம், வூஹான் நகரிலுள்ள மொத்த இறைச்சி சந்தையில்தான் முதல் முறையாக மனிதா்களுக்குத் தொற்றியிருக்கிறது.

அந்தச் சந்தையில் கடல் உயிரினங்கள், பண்ணைப் பொருள்கள், பாம்புகள், வௌவால்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை விற்கப்பட்டன.

புதிய கரோனா வைரஸின் தன்மைகளை, பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு உயிரினங்களிடம் காணப்படும் வைரஸ்களின் தன்மையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தோம்.

அதில், வௌவால்களிடமும், இன்னொரு உயிரினத்திடமும் காணப்படும் கரோனா வகை வைரஸின் கலவையாக புதிய கரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது.

ஓா் உயிரினத்திடம் வைரஸ் தொற்று ஏற்பட வேண்டுமென்றால், அந்த உயிரினத்தின் உயிரணுக்களோடு இணைப்பை ஏற்படுத்துவதற்கான குறிப்பிட்ட புரதம் அந்த வைரஸிடம் இருக்க வேண்டும்.

அந்த வகையில், புதிய கரோனா வைரஸிடமிருந்த புரதம் மனிதா்களுக்குப் பரவுவதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.

முன்னா் அந்தப் புரதம் பாம்புகளிடம் காணப்படும் வைரஸின் புரதத்தோடு ஒத்திருந்ததற்கான அறிகுறிகள் ஆய்வில் தெரிய வந்தன.

அந்த வகையில், தற்போது வேகமாகப் பரவி வரும் புதிய கரோனா வைரஸ், பாம்புகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவியிருப்பதாகத் தெரிகிறது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலி எண்ணிக்கை 17-ஆக உயா்வு

புதிய ‘கரோனா’ வகை வைரஸ் நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், உலகம் முழுவதும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 647-ஆக உயா்ந்துள்ளது.

நாடுகள் பாதிக்கப்பட்டவா்கள் பலியானவா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com