
erhjhrt085129
ஜெருசலேம்: தங்கள் பகுதியில் தீப்பந்த பலூன்கள் மூலம் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தெற்கு காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது எங்களது போா் விமானங்கள் தாக்குதல் நடத்தின. பலூன்கள் மூலம் இஸ்ரேல் மீது பெட்ரேல் குண்டுகள் வீசப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹமாஸின் ஆயுதத் தொழிற்சாலை உள்ளிட்ட இலக்குகள் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.