
புதிய கரோனா வைரஸ் பரவல் நிலைமை பற்றி சீன அரசவை செய்தி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டம் நடத்தியது. சீனத் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைவர் மா சியாவ் வே இதில் பேசுகையில்,
900க்கும் அதிகமான பேர் இடம்பெற்றுள்ள 7 மருத்துவக் குழுக்கள் வூகானைச் சென்றடைந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான பேர் உதவி செய்ய தயாராக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
நோய் தடுப்புப் பணி பற்றி அவர் மேலும் கூறுகையில்,
வசந்த விழாவின் ஒரு வார விடுமுறை, மருத்துவத் தடைக்காப்பு, கிருமிகளை அழித்தல் ஆகிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிய வாய்ப்பாகும் என்று நிபுணர்கள் கருதுவதாக தெரிவித்தார்.
ஹு பெய் மாநிலத்திலும் வூகான் நகரிலும் சட்டப்படி மிகவும் கண்டிப்பான முறையில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 15 நாட்களில் வூகானிலிருந்து வெளியூருக்குச் சென்றுள்ளவர்களுக்கு மருத்துவக் கண்காணிக்க வேண்டும். நோயாளிகளுக்கு இயன்றளவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தவிரவும், நோய் தடுப்புக்கான முன்னேற்பாடு வசதிகள் மற்றும் மருந்து விநியோகத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்