பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோயில் சூறை: 4 பேர் மீது வழக்குப் பதிவு 

சிந்து மாகாணத்தில் தார் சாக்ரோ நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள மாதா தேவல் பித்தானி கோயில்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோயில் சூறை: 4 பேர் மீது வழக்குப் பதிவு 

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஹிந்துக் கோயில் ஒன்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர் சூறையாடினர், அதைத் தொடர்ந்து அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்சு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

சிந்து மாகாணத்தின் தாா் சாக்ரோ நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மாதா தேவல் பித்தானி ஹிந்துக் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் சிலா் கோயிலில் இருந்த சிலைகளை அடித்து நொறுக்கினா். பின்னா் கோயில் வளாகத்தில் இருந்த பொருள்களுக்கும் தீ வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளூா் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: கோயிலை சூறையாடிய அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேர் மீது இன்று திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவா்களை தீவிரமாகத் தேடி வருவதாகவும், அவர்களை அடையாளம் காண குற்றவாளிகளின் கால்தடங்களை வைத்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக சிந்து மாகாண முதல்வரின் சிறப்பு ஆலோசகர் வீர்ஜி கோல்கி கூறுகையில், சிந்து மாகாணத்தில் அமைதியை சீா்குலைக்கும் வகையில் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து சமூக மக்களும் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் நீதியின் முன்பு கொண்டுவந்து நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார். 

பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தை இந்துக்கள் உருவாக்குகின்றனர். பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி 75 லட்சம் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இருப்பினும், சமூகத்தின் கூற்றுப்படி, நாட்டில் 90 லட்சம்  இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

பாகிஸ்தானின் பெரும்பான்மையான இந்துக்கள் சிந்து மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவர்கள் முஸ்லீம்களுடன் தங்களுடைய கலாசாரம், மரபுகள் மற்றும் மொழி ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com