
உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் தெட்ரோஸ் அதானொம் கெப்ரெயெசுஸ் 26ஆம் நாள் பேசுகையில், நான் சீனாவுக்கு வரும் வழியில் இருக்கிறேன்.
சீனாவிலுள்ள கரோன வைரஸால் ஏற்பட்ட நுரையீரல் அழற்சியின் நிலைமையை அறிந்துகொண்டு, சீன அரசு மற்றும் தொடர்புடைய நிபுணர்களுடன் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விவாதிப்பேன் என்றார்.
கடினமான காலத்தில் சிக்கி கொண்ட சீனாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு முயன்ற அதேவேளையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆலோசனை அளிக்கும் வகையில், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்