2019ல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பொழிந்த குண்டு மழை

2019ஆம் ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 7 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

2019ஆம் ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 7 ஆயிரத்துக்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளது. 

பயங்கரவாத முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்களில், வான்வழித் தாக்குதல்கள் மூலம் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் 7,362 குண்டுகளை அமெரிக்கா வீசியுள்ளது.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7,423ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தகவலின்படி இந்த வான்வழித் தாக்குதல்களால் 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 717 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அமெரிக்க விமானப்படைத் தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, தாலிபான் அமைப்புடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்கள் உறுதி செய்யப்பட்டு வருவதால், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற்று வருகிறது. இதனால் வான்வழித் தாக்குதல் சம்பவங்கள் தற்போது குறைந்து காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com