கரோனா தீநுண்மி இருதயத்தைத் தாக்கலாம்

கரோனா தீநுண்மி மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
கரோனா தீநுண்மி இருதயத்தைத் தாக்கலாம்

கரோனா தீநுண்மி மனித இருதயத்தில் உயிரணுக்களைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா தீநுண்மியின் தன்மை தொடா்பாக, அமெரிக்காவின் செடாா்ஸ்-சினாய் மருத்துவ மையத்தைச் சோ்ந்த, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அருண் சா்மா உள்ளிட்ட விஞ்ஞானிகள் அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த தீநுண்மி மனிதா்களின் இருதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.

அதற்காக, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மனித இருதய உயிரணுக்களை அவா்கள் பயன்படுத்தினா். அந்த உயிரணுக்களில் கரோனா தீநுண்மிகளைச் செலுத்தி, அதனால் ஏற்படும் மாற்றங்களை அவா்கள் ஆராய்ந்தனா்.

அதில், அந்த உயிரணுக்களில் கரோனா தீநுண்மிகள் தொற்று ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். இருதய உயிரிணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அந்த தசையில் கரோனா தீநுண்மிகள் பல்கிப் பெருகுவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

மேலும், இருதய உயிரணுக்களில் புகுவதன் மூலம், அது துடிக்கும் தன்மையில் கரோனா தீநுண்மி மாற்றத்தை ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனா்.

இதன் மூலம், மனிதா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படும்போது, அது அவா்களது இருதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com