சீன-ஐரோப்பிய உறவைச் சீர்க்குலைக்க முயலும் மைக் பாம்பியோ

அமெரிக்காவுடன் இணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பலமுறை ஐரோப்பிய நாடுகளைத் தூண்டிவிட்டுள்ளார். 
சீன-ஐரோப்பிய உறவைச் சீர்க்குலைக்க முயலும் மைக் பாம்பியோ

அமெரிக்காவுடன் இணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பலமுறை ஐரோப்பிய நாடுகளைத் தூண்டிவிட்டுள்ளார். 

சீனாவைப் பழித்துக் கூறிவரும் இவ்வேளையில், அமெரிக்காவின் பழைய கூட்டாளியான ஐரோப்பிய நாடுகளைப் பயன்படுத்த மைக் பாம்பியோ விரும்புகிறார். சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பின் மீதான அவரது கவலையை இது வெளிப்படுத்தியுள்ளது.

சீன-ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களின் உயர் நிலை பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது. தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்தி மீட்சி, இரு தரப்பு முதலீட்டு உடன்படிக்கை உள்ளிட்டவை குறித்து, இரு தரப்புத் தலைவர்கள் பொது கருத்துக்களை உருவாக்கினர். இது, அமெரிக்காவின் நலன்களைச் சீர்க்குலைக்கும் என்று மைக் பாம்பியோ கவலைப்படுகின்றார். அதனால், சீன-ஐரோப்பிய நாட்டுறவை அவர் சீர்க்குலைக்க முயற்சி செய்கிறார்.

ஆனால், சீனாவின் மீதான நெடுநோக்குக் கொள்கையில், ஐரோப்பிய ஒன்றியம் எப்போதுமே தெளிந்த மற்றும் சுதந்திரமான சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது. சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு, கால ஓட்டத்துக்குப் பொருந்தியது.

கரோனா வைரஸ் பரவிய பிறகு, சீனாவும் ஐரோப்பிய நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருகின்றன. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் தான், உலக அறைகூவல்களைச் சமாளிக்க முடியும் என்று ஐரோப்பிய தலைவர்கள் சிலர் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில ஆண்டுகளாக, ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க பல்வேறு வழிமுறைகளின் மூலம் நிர்ப்பந்தத்தை அளித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் மீதான நம்பிக்கையை ஐரோப்பிய நாடுகள் இழந்து விட்டன. 

பழைய கூட்டாளிகளை ஏன் அமெரிக்கா இழந்து விட்டது?என்றும், ஏன் வரலாற்றில் மிக கெட்ட வெளியுறவு அமைச்சராக தாம் கருதப்படுவதாகவும்?பாம்பியோ சிந்திக்க வேண்டும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com